மதுரை

திருப்பரங்குன்றம் தொகுதியில் ரூ.3 கோடிக்கு சாலை பணிகள்

வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மதுரை

திருப்பரங்குன்றம் தொகுதியில் ரூ.3 கோடிக்கு சாலை பணிகளை வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி 94-வது வார்டு பகுதியில் ரூ.3 கோடி மதிப்பிலான சாலை திட்டப் பணி தொடக்க விழா ந உதவி ஆணையாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி செயலாளரும், திருப்பங்குன்றம் கிழக்கு பகுதி கழக செயலாளருமான வக்கீல் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட கழக துணை செயலாளர் முத்துக்குமார், 94- வது வட்ட கழக செயலாளர் ஜெயகல்யாணி ஆகியோர் வரவேற்றனர்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா சாலை திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-

திருப்பரங்குன்றம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் தொகுதியாகும். ஆனால் அவர் தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. உங்கள் கோரிக்கைகளை ஏற்று முதலமைச்சர் பாரபட்சமில்லாமல் திட்டங்களை வழங்கி வருகிறார். எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் உங்களை புறக்கணித்த திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்.

தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி யாரை மீண்டும் பதவியேற்க முருகப்பெருமானின் ஆறுபடை வீட்டின் முதல் படையாக இருக்கும் திருப்பரங்குன்றம் தொகுதி கழகத்திற்கு முதல் வெற்றி செய்தி தந்த தொகுதி என்ற வரலாற்றை நீங்கள் உருவாக்கி தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் எஸ்.முருகேசன், எம்.கருணா, மாவட்ட கலை பிரிவு செயலாளர் மோகன்தாஸ், பகுதி கழக துணை செயலாளர் செல்வகுமார், பகுதி செயலாளர் பி.எஸ்.பாலமுருகன், வட்ட கழக செயலாளர்கள் கருத்த முத்து, செல்லப்பாண்டி, செல்வம், சரவணன், சத்தியமூர்த்தி, முத்து கிருஷ்ணன் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள்் சக்திவேல், காசிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.