தற்போதைய செய்திகள்

திருவொற்றியூரில் தீ விபத்து 11 குடிசை வீடுகள் எரிந்து நாசம்

முன்னாள் எம்.எல்.ஏ.கே.குப்பன் நிதி உதவி வழங்கி ஆறுதல்

அம்பத்தூர்

திருவொற்றியூரில் தீ விபத்து காரணமாக 11 குடிசை வீடுகள் எரிந்து நாசமானதை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ.குப்பன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்கூறி நிதியுதவி வழங்கினார்.

திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகரில் பட்டாசு வெடித்து தீப்பொறி தென்னை மரத்தில் பட்டது. அதிலிருந்து அருகில் உள்ள குடிசைகளுக்கு தீ பரவியதில் 11 வீடுகள் தீக்கிரையாகிது. அருகில் இருந்த மூன்று வீடுகளை தீயில் பாதிக்கப்படும் என்பதால் இளைஞர்கள் பிரித்து எறிந்தனர்.

இந்த தீ விபத்தால் 11 வீடுகள் பாதிக்கப்பட்டன பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் ஆறுதல் கூறி குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் 10 கிலோ அரிசி,பாய், தலையணை போர்வை,புடவை, வேஷ்டி, மற்றும் ரொக்க பணம் இரண்டாயிரம் ஆகியவற்றை தலா பதினோரு குடும்பங்களுக்கு வழங்கினார்.

அப்போது பொதுமக்கள் இந்த தொகுதியின் எம்எல்ஏவான திமுகவை சேர்ந்த கே.பி.சங்கர் எங்களை வந்து பார்க்கவும் இல்லை எங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும் இல்லை அதிமுக ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி எங்களுக்கு உதவுவது

நீங்கள் தான் என்று ஆவேசத்துடன் கூறினார்கள். இதே போல்திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் பகுதியைச் 9 வது தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது வீட்டின் மாடியில் மல்லிகா (65) என்பவர் குடிசை வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். நேற்று திடீரென்று பட்டாசு தீப்பொறி பட்டு இவரது குடிசை எரிந்தது. தீ கொழுந்து விட்டு எரிந்ததால் வெளியே வர முடியாமல் மல்லிகா அலறி துடித்தார்.

அருகில் இருந்தவர்கள் மல்லிகாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தீக்காயம் அதிகமாக இருந்ததால் மல்லிகா மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி மல்லிகா இறந்து விட்டார்..இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த கட்டில் பீரோ பாத்திரங்கள் போன்ற அனைத்து பொருட்களும் எரிந்து சேதம் ஆகியது. அதேபோல் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் சங்கர்.

இவர் வீட்டின் அருகாமையில் பழைய பிளாஸ்டிக் குடோன் நடத்தி வருகிறார். நேற்று மாலை இவரது குடோனில் பட்டாசு பொறி விழுந்ததால் பற்றி எரிந்தது. இந்த தீ பக்கத்தில் உள்ள மூன்று குடிசைகளுக்கும் பரவியது. உடனே திருவொற்றியூர் தண்டையார்பேட்டை போன்ற பகுதியில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதில் குடோன் மற்றும் அருகில் இருந்த மூன்று குடிசைகளும் பற்றி எரிந்தது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆகியது அந்தப் பகுதியில் தீயில் எறிந்த வீடுகளை முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன், கவுன்சிலர் கே.கார்த்திக் பார்வையிட்டு ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.