தற்போதைய செய்திகள்

திரு.வி.க. நகரில் 1000 பேருக்கு நிவாரண உதவிகள் – பா.வளர்மதி, நா.பாலகங்கா ஆகியோர் வழங்கினர்

சென்னை

வட சென்னை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவர் பெரம்பூர் ஆர்.ராகேஷ்ராஜா தலைமையில் 1000 பேருக்கு நிவாரண உதவிகளை கழக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா ஆகியோர் வழங்கினர்.

ஊரடங்கு மற்றும் கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க பொதுமக்களுக்கு கழகத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி வடசென்னை தெற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதி 70-வது வட்டம் ஜமாலியாவில் வடசென்னை தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் பெரம்பூர் ஜமாலியா ஆர்.ராகேஷ் ராஜா ஏற்பாட்டில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவரும், கழக இலக்கிய அணி செயலாளருமான பா.வளர்மதி, வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா ஆகியோர் 1000 ஏழை மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள், முககவசம், வேட்டி, புடவை, உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் திருவிக நகர் பகுதி கழக செயலாளர் இரா.வீரமணி, ஏ.இளையகிருஷ்ணன், கே.ராஜ் முகமது, வட்ட செயலாளர்கள் நவமணி, கே.சிவக்குமார், ஜீவா, எம்.பி.பரமகுரு மற்றும் எடைகுமார் புண்ணியகோட்டி, ஏ.வி.ராவ், அரிபாபு, அஜித், ஆசிர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.