சிறப்பு செய்திகள்

தி.மு.க.- தே.மு.தி.க.வை சேர்ந்த 100 பேர் கழகத்தில் இணைந்தனர்

இணை ஒருங்கிணைப்பாளர் வாழ்த்து

சேலம்,
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த தி.மு.க. மற்றும் தே.மு.தி.க.வை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காடையாம்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இல்லத்தில் நேற்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சேலம் கிழக்கு ஒன்றியம் 5-வது வார்டு கவுன்சிலர் தி.மு.க.வை சேர்ந்த கவுசல்யா திருப்பதி, மேற்கு ஒன்றியம் 16-வது வார்டு கவுன்சிலர் தே.மு.தி.கவை சேர்ந்த சுமதி சேட்டு ஆகியோர் தலைமையில் 30 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

புதிதாக கட்சியில் இணைந்த அனைவருக்கும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கட்சி துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஓமலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணி, ஓமலூர் மேற்கு ஒன்றிய சேர்மன் ராஜேந்திரன்,
வடக்கு ஒன்றிய சேர்மன் மணிமுத்து உள்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.