தற்போதைய செய்திகள்

தி.மு.க.வின் முகத்திரையை கிழித்தெறிவோம் – முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் சபதம்

தென்காசி.

தி.மு.க.வின் முகத்திரையை கிழித்தெறிவோம் என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் கூறினார்.

தென்காசி வடக்கு மாவட்ட கழக அமைப்பு தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் வல்லத்தில் மாவட்ட கழக செயலாளரும், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சரும், கழக மகளிரணி துணை செயலாளருமான வி.எம்.ராஜலட்சுமி, கழக எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அ.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான என்.தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி ேபசியதாவது:-

இப்போது நாம் எதிர்க்கட்சியாக உள்ளோம். இந்த நேரத்தில் ஆளும் கட்சியினர் செய்கின்ற தவறுகளை மக்களுக்கு எடுத்துரைத்து தி.மு.க.வின் முகத்திரையை கிழிக்க வேண்டும். நமக்கு ஒரே எதிரி தி.மு.க. மட்டுமே.

சட்டமன்றத்தில் அவர்கள் செய்யும் அராஜகங்கள் அதிகம். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர்களுக்கு அப்படி என்றால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்த நாம் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று காட்டவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.