தற்போதைய செய்திகள்

துரிஞ்சாபுரத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கழக கொடி ஏற்றி மரியாதை

திருவண்ணாமலை:

கழகத்தின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு துரிஞ்சாபுரத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கழக கொடி ஏற்றி நிர்வாகிகளுக்கு மரியாதை செய்தார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலையனூர்எம்.ஜி.ஆர். திடலில் கழகம் என்ற பேரியக்கத்தின் பொன்விழா ஆண்டு முடிவடைந்து 51 -ம்ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு முன்னாள் தமிழக முதல்வர்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா,ஆகியோரின் திரு உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கழக கொடியினை முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளருமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ ஏற்றி வைத்தும், கல்வெட்டினை திறந்து வைத்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

அதனைதொடர்ந்து கழக மூத்த நிர்வாகிகளுக்கு கழக சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில்மாவட்ட அவைத் தலைவர் நாராயணன்,மாவட்ட பொருளாளர் எம். எஸ்.நைனா கண்ணு,துரிஞ்சாபுரம் மேற்குஒன்றிய கழகச் செயலாளர் ஏ. கோவிந்தராஜ்,மாவட்ட விவசாய பிரிவு துணைச் செயலாளர் சம்பத், வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தரணிதரன்,ஒன்றிய அவைத்தலைவர் எஸ்.கோவிந்தசாமி,தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் எம். சேகர் ,சாலையனூர் ஊராட்சி மன்ற தலைவர் டி. மாசிலா மணி,துணைத் தலைவர் எஸ். அமிர்தம் சண்முகம்,ஒன்றிய இணைச் செயலாளர் சித்ரா, ஒன்றிய துணை செயலாளர் பி.வெள்ளை கண்ணு, எஸ்.பரமேஸ்வரி,

பொருளாளர் அரி பிரசாத்,மாவட்ட பிரதிநிதிகள் எ. ரேஷ்மா அல்லா பகஷ், கே. செந்தில்குமார், எஸ். கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் எம். முனியம்மாள், வெறையூர் எம். அருண் மூர்த்தி,சிவமூர்த்தி,சாலையனூர் கிளைக் கழகச் செயலாளர்கள் குப்பன், இ.பரசுராமன், பழனி,அருள்தாஸ், சக்திவேல், சூரிய பிரகாஷ், மோகன், டிஸ்கோமணி,எஸ். பரசுராமன், பாலச்சந்தர், முருகன், வார்டு உறுப்பினர்கள் சக்திவேல், ராணி பழனி ,ஆர். பாஸ்கர்,உள்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.