தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் விரைவில் தொழில் ஏற்றுமதி பூங்கா – அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

சென்னை

தூத்துக்குடி மாவட்டத்தில் விரைவில் தொழில் ஏற்றுமதி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அமைச்சர்
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது ஒட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா
ஒட்டப்பிடாரத்தில் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,தனது தொகுதியில் தொழில் ஏற்றுமதி பூங்கா அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொழில் பூங்கா அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.இந்த பணிகள் முடிவுற்ற பிறகு தொழில் பூங்கா அமைக்கப்படும் .தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டி புரம் விளாத்திகுளத்தில் தொழில் பூங்காக்கள் அமைக்கா இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மேம்பாடு அடையும்.தென்மண்டல வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. 11 ஆயிரம் ஏக்கர் நிலம் அரசு கையகப்படுத்த வேண்டும் என்ற இலக்கில் நில வங்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது.தற்போது வரை 8900 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.தற்போது உறுப்பினர் குறிப்பிட்ட ஒட்டபிடாரத்தில் தொழிற்சாலை அமைக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.