தற்போதைய செய்திகள்

தேர்தலுக்கு பின் தி.மு.க. காணாமல் போய் விடும் – அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு

திருவண்ணாமலை

திமுக.வின் ஏமாற்று வேலை மக்களுக்கு தெரிந்து விட்டது. தேர்தலுக்கு பின் திமுக என்ற ஒரு கட்சி இல்லாமல் போய்விடும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் வந்தவாசி தொகுதி கழகம் சார்பில் வந்தவாசி சீனிவாச திருமண மண்டபத்தில் வந்தவாசி நகர கழகம் சார்பிலும், வந்தவாசி மேற்கு ஒன்றியம், வந்தவாசி கிழக்கு ஒன்றியம், பெரணமல்லூர் கிழக்கு ஒன்றியம், பெரணமல்லூர் பேரூராட்சி கழகம் சார்பிலும் கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மேலும் வந்தவாசி அடுத்த தெள்ளார் டிகேபி.மணி திருமண மண்டபத்தில் தெள்ளார் வடக்கு, தெள்ளார் தெற்கு கிழக்கு, தேசூர் பேரூராட்சி. கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், உயர் கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன், கழக அமைப்பு செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பணிசெய்வது குறித்து ஆலோசனை வழங்கினர். இதில் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டங்களுக்கு மாவட்ட அவைத்தலைவர் டிகேபி.மணி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.பாஸ்கர் ரெட்டியார், நகர செயலாளர் ஓட்டல் எம்.பாஷா, ஒன்றிய செயலாளர்கள் எம்.கே.ஏ.லோகேஸ்வரன், டி.வி.பச்சையப்பன், ஆர்.அர்ஜீனன், ஜி.செல்வராஜ், வி.தங்கராஜ், பேரூராட்சி செயலாளர்கள் ஆர்.மூர்த்தி, கே.முனுசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை நாம் கவனமாக சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இக்கிறோம். திமுகவினர் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் உள்ளனர். அவர்கள் ஆட்சிக்கு வர எதை வேண்டுமானாலும் செய்ய தயாராகவுள்ளனர். ஆகையால் நாம் கவனமாக தேர்தல் பணிகளை செய்ய வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசு அம்மாவின் அரசு. ஆகையால் தான் 2016ம் ஆண்டு மீண்டும் கழகம் ஆட்சிக்கு வந்தது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நகைகடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை தந்து திமுகவினர் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று வெற்றி பெற்றனர். அவர்களின் ஏமாற்று வேலை மக்களுக்கு தெரிந்து விட்டது. தற்பொது கிராமசபை கூட்டம் என நடத்தி மீண்டும் பொய்யான தகவல்களை கூறி வருகின்றனர் அவற்றை முறியடித்து வரும் தேர்தலில் கழக வேட்பாளரை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து கழக அரசை தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்த்துவோம். தேர்தலுக்கு பின் திமுக என்ற ஒரு கட்சி இல்லாமல் போய்விடும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.எம்.பாபுமுருகவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நளினி மனோகரன், எ.கே.எஸ்.அன்பழகன், மாவட்ட இணை செயலாளர் விமலாமகேந்திரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் எ.விஜய், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஜாகீர்உசேன். வந்தவாசி ஒன்றியக்குழுத்தலைவர் எ.ஜெயமணி ஆறுமுகம், மாவட்ட மகளிரணி இணை செயலாளர் அன்னபூரணிவிஜய், மாவட்ட நிர்வாகிகள் பாலுமுதலியார், எம்.சக்கரபாணி, எஸ்.சீனுவாசன், ராஜேஷ்கண்ணா, லதாகுமார், திருமூலன் என்கிற பையாகுட்டி, வேலப்பாடி சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.