தற்போதைய செய்திகள்

தேவர் திருமகனார் புகழுக்கு `புகழ்’ சேர்த்தது கழக அரசு – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பெருமிதம்

தூத்துக்குடி

தேவர் திருமகனார் புகழுக்கு புகழ் சேர்த்தது கழக அரசு என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பெருமிதத்துடன் கூறினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அவரது திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் தேவர் சிலை வைக்கப்பட்டுள்ள அறைக்கு தனது சொந்த செலவில் அமைக்கப்பட்டுள்ள குளிர்சாதன வசதியையும் அவர் திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் தேவர் திருமகனார். தனக்கென ஒரு குடும்பம் அமைத்துக் கொள்ளமல் மக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த தியாக செம்மல் தேவர் திருமகனார் என்று சொன்னால் அது மிகையாகாது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு கழகத்தின் சார்பில் தன்னுடைய சொந்த பொறுப்பில் தங்க கவசம் வழங்கி பெருமை சேர்த்தார். அதேவகையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை நந்தனத்தில் தேவர் திருமகனாருக்கு மகத்தான சிலை அமைத்தவரும் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்தான். செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் அரசு விழா சென்னை தலைநகரிலும் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அரசு இந்த விழாவை கொண்டாடி தேவர் பெருமகனாரின் புகழுக்கு புகழ் சேர்க்கின்ற பெருமையை கழக அரசு செய்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட கழக பொருளாளர் ஆரோன் மோசஸ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் சிதம்பராபுரம் நீலகண்டன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் தூத்துக்குடி ஜீவா பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சாம் கவுதம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் விஜயராஜ், கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ், கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, கிழக்கு ஒன்றிய செயலாளரும், கருங்குளம் ஒன்றிய துணைத்தலைவருமான லட்சுமண பெருமாள், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.