திருச்சி

தொகுதி மக்கள் – விவசாயிகளுக்கு கே.என்.நேரு ஏதாவது செய்தது உண்டா? திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் கேள்வி

திருச்சி

மத்தியிலும், மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தொகுதி மக்கள் விவசாயிகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு என்ன செய்தார் என திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.குமார் கேள்வி விடுத்துள்ளார்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், லால்குடி தெற்கு ஒன்றியம், ஆலங்குடி ஊராட்சியில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சூப்பர் டி.என்.டி.நடேசன் தலைமை வகித்தார்.

இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் வி.டி.எம்.அருண்நேரு முன்னிலை வகித்தார். இலால்குடி தெற்கு ஒன்றிய இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஆலங்குடி என்.பாலாஜி வரவேற்புரை ஆற்றினார். முகாமை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.குமார் துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட கழக செயலாளர் ப.குமார் பேசியதாவது:- 

2006-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரை தமிழகத்தில் ஆட்யிலிருந்தது தி.மு.க., அதேபோல் 2001-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை 14 ஆண்டுகள் வரை மத்தியில் நடைபெற்ற ஆட்சியில் அங்கம் வகித்தது தி.மு.க. இந்தப் பகுதியில் 2009-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டுவரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நெப்போலியன் மத்திய இணை அமைச்சராகவும் இருந்தார்.

இந்த (லால்குடி) தொகுதியில் பிறந்த கே.என்.நேரு மாநிலத்தில் அமைச்சராக இருந்தார். இவர்கள் இவருரையும் பற்றி இங்கே குறிப்பிடுவதற்கு காரணம். லால்குடி தொகுதி முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி இருக்கக் கூடிய தொகுதி. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது தொகுதி மக்களுக்காக, விவசாயத்திற்காக கே.என்.நேரு என்ன செய்தார் என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தி.மு.கவினர் ஆட்சிக்கு வர துடிப்பதற்கு காரணம் தமிழக மக்களை வளமாக வாழவைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. தி.மு.கவினர் தங்கள் குடும்பங்களை வளமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்பதையும் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.லால்குடி தொகுதியைப் பொறுத்தவரை, உங்களுக்கு ஒரு சாபக்கேடாக 15 ஆண்டுகளாக தொடர்ந்து தி.மு.கவைச்சேர்ந்த ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். தேர்தல் சமயத்தில் வெற்றிச்சான்றிதழ் பெறும்போது மட்டும்தான் அவரை பார்க்க முடியும்.

தொடர்ந்து 15 ஆண்டுகாலமாக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் எங்கேயாவது அவர் பெயர் நிலைக்கும்படி ஏதாவது இந்த தொகுதிக்கு திட்டங்கள் கொண்டுவந்து இருக்கின்றாரா? என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். ஆனால், புரட்சித்தலைவி அம்மா அரசுதான் உங்களுக்காக தரமான சாலை வசதிகளையும், சாக்கடை வசதிகளையும், தெருவிளக்கு வசதிகளையும் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொடுத்திருக்கிறது. தொடர்ந்து பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. தற்பொழுது ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. உங்கள் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கின்ற கழக அரசுக்கு என்றென்றும் நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் பேசினார்.

இம்முகாமில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.பாலன், மாவட்ட கழக அவைத் தலைவர் ஏ.பி.எல்.பர்வீன்கனி, மாவட்ட கழக இணை செயலாளர் ரீனாசெந்தில், மாவட்ட கழக துணை செயலாளர், மாவட்ட கவுன்சிலர் எம்.ஆர்.ராஜ்மோகன், மாவட்ட கழக பொருளாளர் நெட்ஸ் எம்.இளங்கோ, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஏ.டி.எல்.டோம்னிக் அமல்ராஜ், புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டி.என்.சிவக்குமார், மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வமேரிஜார்ஜ், கழக பொதுக்குழு உறுப்பினர் விஜயா, மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் எம்.சுரேஷ்குமார், மாவட்ட கழக முன்னாள் அவைத்தலைவர் அன்பில் தர்மதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.