வேலூர்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை செயல்பட விடாமல் தி.மு.க. முட்டுக்கட்டை-பதிவாளரிடம் திருவலம் தலைவர் புகார்

வேலூர்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திருவலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை செயல்பட விடாமல் தி.மு.க. செயலாளர் தடுப்பதாக பதிவாளரிடம் தலைவர் புகார் அளித்துள்ளார்

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த திருவலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளராக திமுகவை சேர்ந்த மஞ்சுளா இருந்து வருகிறார். இவர் ஆளும் கட்சி என்பதால் சங்க விதிமுறைகளுக்கு கட்டுப்படாமலும், சங்க பணிகளை செயல்படுத்துவதிலும், சங்க உறுப்பினர்களுக்கு கடன் வழங்கி சேவை புரிவதிலும்,

தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு போதிய ஒத்துழைப்பு தராமல் செயல்பட்டு வருவதாகவும், சங்க நிர்வாகக்குழு கூட்டத்திற்கு முறையான அழைப்பு விடுத்தும் மஞ்சுளா கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருதாகவும், இதனால் சங்க உறுப்பினர்களுக்கு கடன் வழங்குவதில் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், சங்க தலைவர் சுலோச்சனா கூட்டுறவு சங்ககளின் பதிவாளருக்கு கடிதம் மூலம் புகார் அளித்துள்ளார்.

மேலும் திமுக பெண் சங்க செயலாளர் மஞ்சுளா விடுப்பில் செல்லும் போது சங்க ஆவணங்களை அவருக்கு அடுத்த பணிகளில் உள்ள பணியாளர்களிடம் ஒப்படைக்காமல் வேண்டுமென்றே சாவியை எடுத்து சென்று விடுகிறார். இதனால் சங்க பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

எனவே சங்க நலனுக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்படும் பொது பணி நிலை திறன் பணி கீழ் பணியாற்றும் திமுகவை சேரந்த சங்க செயலாளர் மஞ்சுளா மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கழகத்தை சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர் சுலோச்சனா புகார் அளித்துள்ளார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சங்க நலனுக்கு கேடு விளைவிக்கும் வகையில், அடாவடி செயலில் ஈடுபடும்
திமுக பெண் சங்க செயலாளர் மஞ்சுளா மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா என்று கிராம மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். திமுக.வின் விடியல் ஆட்சியில் கூட்டுறவு சங்க ஆலோசனை கூட்டங்கள் காவல்துறை பாதுகாப்புடன் நடத்தப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக திருவலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆலோசனை கூட்டம் கூட்டுறவு சங்க தலைவர் சுலோச்சனா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவர் மற்றும் 8 சங்க நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் தி.மு.க.வை சேர்ந்த நிர்வாக உறுப்பினர்கள் இருவர் கலந்து கொள்ளவில்லை.