தற்போதைய செய்திகள்

நல்லம்பள்ளி அதியமான்கோட்டையில் 608 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள்- அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை

தருமபுரி

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அதியமான் கோட்டையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.60.92 கோடி மதிப்பில் 608 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுமான பணியை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் க.இராமமூர்த்தி தலைமை வகித்தார்

இவ்விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம், அதியமான்கோட்டை கிராமத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.60.92.கோடி மதிப்பில் 608 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிடம் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு வீடும் தலா 400 சதுர அடிகள் பரப்பளவில் அமையவுள்ளது. இப்பணிகள் 15 மாதங்களில் நிறைவுற்று விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.