தற்போதைய செய்திகள்

நவம்பர் மாத இறுதிக்குள் ஆரணிக்கு காவேரி குடிநீர் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தகவல்

திருவண்ணாமலை

ஆரணி மக்களுக்கு நவம்பர் மாத இறுதிக்குள் காவேரி குடிநீர் வழங்கப்படும் என்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஒன்றியம் அய்யம்பாளையம், 5 புத்தூர், ஆண்டிபாளையம், வண்ணாங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்றார். அவரது முன்னிலையில் மேற்கண்ட கிராமங்களிலிருந்து 300 பேர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்களாக இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது:-

நடைபெறும் கழக ஆட்சியில் பொதுமக்கள் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். மக்கள் ஆட்சியாக நடந்து வருகிறது மக்களின் தேவைகளைஅறிந்து அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் அரசாக உள்ளது, புதியதாக இணைந்துள்ளவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கழக அரசு அமைய சிறப்பாக தேர்தல் பணிகளை செய்திட வேண்டும். கழக அரசின் சாதனைகளை வீடு வீடாக எடுத்து செல்லுங்கள்.

ஆரணி மக்களின் பல ஆண்டு கனவு நிறைவேறும் வகையில் காவேரி குடிநீர் நவம்பர் மாத இறுதிக்குள் வரவுள்ளது. ஆரணி மையப்பகுதி சூரியகுளம் ரூ.6.5 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிப்பு செய்து பூங்கா அமைத்தல், நடைபாதை, சிறப்பு மின்விளக்கு அலங்காரம் என ஆரணி அழகுமிகு ஆரணியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆரணிக்கு செய்துள்ள சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்லுங்கள். வரும் தேர்தலில் கழகம் அறிவிக்கும் வேட்பாளரை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வோம்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசினார்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ப.திருமால், மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, மாவட்ட பொருளாளர் அ.கோவிந்தராசன், ஒன்றிய செயலாளர்கள் பிஆர்ஜி.சேகர், ஜி.வி.கஜேந்திரன், நகர செயலாளர் எ.அசோக்குமார், கண்ணமங்கலம் குமார், நகர மாணவரணி செயலாளர் குமரன், தகவல் தொழில் நுட்பபிரிவு சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.