தற்போதைய செய்திகள்

நாகப்பட்டினத்தில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை ஒன்றியத்திற்குட்பட்ட சித்தமல்லி ஆனந்ததாண்டவபுரம் மாப்படுகை மற்றும் குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வானாதி ராஜபுரம் கிராமத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்து பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழகம் முழுவதும் அனைத்து மக்களுக்கும் சுகாதாரத் துறையின் அனைத்து சேவைகளும் சிரமமின்றி உடனடியாக கிடைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தற்போதைய அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வெகுதூரத்தில் உள்ளவர்களும் பயன்பெறும் வகையில் மருத்துவ வசதிகளை அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே கொண்டுசென்று மக்களுக்கு உரிய நேரத்தில் உடனடி மருத்துவ வசதிகளை அளிப்பதற்காக முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டத்தினை அறிவித்து தொடங்கி வைத்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இத்திட்டத்தை தொடங்கியதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு தரமான சிகிச்சைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். மனிதனுக்கு உடலில் எந்த விதமான தொந்தரவுகள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் கிராமங்களில் உள்ள மக்கள் சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமானால் உங்கள் ஊரிலேயே முதலமைச்சர் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. அம்மா மினி கிளினிக்குகளுக்கு விரைவில் அனைத்து தனி கட்டடங்கள் கட்டுவதற்கு முதலமைச்சர் நிதி ஒதுக்கி அறிவிப்பினை வெளியிடுவார்.

தமிழகத்தில் பொதுமக்கள் பொங்கல் திருநாள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் 2500 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி பருப்பு, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். நமது மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விரைவில் டோக்கன் முறையில் பொங்கல் பரிசு வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.