தற்போதைய செய்திகள்

நாம் தமிழர் கட்சியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் விலகி கழகத்தில் இணைந்தனர் – அமைச்சர் எம்.சி.சம்பத் வரவேற்று வாழ்த்து

கடலூர்

நாம் தமிழர் கட்சியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் விலகி கழகத்தில் இணைந்தனர். அவர்களை வரவேற்று அமைச்சர் எம்.சி.சம்பத் வாழ்த்தினார்.

மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி கழகத்தில் இணையும் விழா கடலூர் மத்திய மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் நகர கழக செயலாளர் ஆர்.குமரன் தலைமை தாங்கினார். கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இராம பழனிசாமி, மாவட்ட விவசாயப்பிரிவுச் செயலாளர் கே.காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கடலூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு என்கிற ஸ்ரீநாத் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தனர். சமூகஇடைவெளியுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கழகத்தில் இணைந்த அனைவருக்கும் வாழ்த்துக்களையும், நன்றியையும் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கடலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இராம.பழனிசாமி, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் ஆர்.வி.ஆறுமுகம், கடலூர் நகர துணை செயலாளர் வ.கந்தன், கடலூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தெய்வ பக்கிரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் நாம் தமிழர் கட்சியின் கடலூர் ஒன்றிய செயலாளர் நாராயணசாமி, குறிஞ்சிப்பாடி தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் ஜான் சகாயராஜா, கடலூர் நகர செய்தித்தொடர்பாளர் முகேஷ் ஆகியோரும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.