திருவள்ளூர் மதுரை

நெசவாளர்களுக்கு ரூ. 5000 மழைக்கால நிவாரணம்-கழக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி

மதுரை

நெசவாளர்களுக்கு ரூ. 5000 மழைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று கழக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா உறுதி அளித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள கைத்தறி நகரில் ஏராளமான நெசவு தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதி நெசவாளர்களிடம் திருப்பங்குன்றம் தொகுதி வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பிரச்சாரம் செய்தபோது தானும் நெசவு வேலையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது:-

ஒரு மனிதனுக்கு தேவை உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க இருப்பிடம் ஆகும் அதனால்தான் மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி அம்மா அரசு வழங்கி வருகிறது, அதை தொடர்ந்து பசுமை வீடு திட்டம் மூலம் குடியிருக்க வீடு வழங்கப்பட்டு வருகிறது, அதேபோல் பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் விலையில்லா வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது.

அதுவும் கூட உங்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வண்ணம் உங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம்தோறும் 200 யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் 2.38 லட்சம் நெசவாளர்கள் பயன்பெறுகின்றனர்.

தற்போது தேர்தல் அறிக்கையில் கூட கைத்தறி மற்றும் நெசவு வேலை செய்யும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு அவர்கள் பெற்ற தொகையில் ஒரு லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், கைத்தறி மற்றும் கூலி நெசவு தொழில் செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்றும், கைத்தறி மற்றும் கூலிக்கு நெசவு தொழில் செய்யும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு மழை மழைக்கால நிவாரணம் 5,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அம்மாவின் அரசு நெசவாளர்களை காக்கும் அரசு ஆகவே உங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக்கும் வண்ணம் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் எனக்கு உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.