தற்போதைய செய்திகள்

பட்டாசு தொழிலை பாதுகாக்க என்றும் உறுதுணையாக இருப்பேன் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி

சிவகாசி

பட்டாசு தொழிலை பாதுகாக்க என்றும் உறுதுணையாக இருப்பேன் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உறுதி அளித்துள்ளார்.

சிவகாசி அருகே ரிசர்வ்லயனில் அரிமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் புதிய விழா மேடை திறப்பு விழா மற்றும் மழைநீர் சேகரிப்பு தொட்டி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு புதிய விழா மேடையை திறந்து வைத்து பேசியதாவது:-

சிவகாசி தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்டுளேன். தொடர்ந்து சிவகாசி மக்களுக்காக உழைப்பேன். நீஙகள் கூப்பிட்ட குரலுக்கு என்றேன்றும் ஓடோடி வருவேன். கல்விச் செல்வம் அழியாச் செல்வம். கடைசிவரை வாழவைக்கும் செல்வம் கல்விச் செல்வம் மட்டுமே. கல்விக்காக தமிழக அரசு ஏராளமான நிதி உதவிகளை செய்து வருகிறது.

அரசு நிதி உதவிகளை மாணவ மாணவிகள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உழைக்கும் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தில் இருநது எம்ஜிஆர் படங்களுக்கு வால்போஸ்டர் ஒடடி கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை பெற்று இன்று நான் படிப்படியாக வளர்ந்துள்ளேன். திருத்தங்கல் அரசு பள்ளியி்ல்தான் நான் படித்தேன். அப்போது அன்றைய தினம் பயிற்றுவித்த ஆசிரியர்களால் இன்றுநான் வெளிநாடுவரை செல்ல முடிந்தது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பட்டாசு தொழிலாளர்களின் பிள்ளைகள் படிக்கும் வகையில் இந்த பள்ளி சிறந்து விளங்குகின்றது.

கொரோனா காலங்களில் பொதுமக்களிடம் இருந்து பொது மக்களை பாதுகாத்த அரசு எடப்பாடியார் அரசு. இன்று உயிரிழப்பு இல்லாத நிலையை நாங்கள் உருவாக்கியுள்ளோம். சிவகாசி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஈடாக தரம் உய்த்தும் பணியில் கண்டிப்பாக ஈடுபடுவேன். பெருந்தலைவர் காமராஜர் பிறந்த புன்னிய பூமியில் மெடிக்கல் காலேஜ் கொண்டு வந்தது எடப்பாடியார் அரசு.

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலையில் நமது மாவட்ட மருத்துவ கல்லூரி மட்டுமே அமைந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் விரைவில் பல் மருத்துவமனையும் அமையவிருக்கின்றது. என்னுடைய முயற்சியால் எடப்பாடியார் அரசு இந்த இரண்டு கல்லூரிகளை நமது விருதுநகர் மாவ்டடத்திற்கு வழங்கியுள்ளது.

மேலும் அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், திருவில்லிபுத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நான்தான் கொண்டு வந்துள்ளேன். சில நாட்களுக்கு முன்பு சிவகாசி பட்டாசு தொழில் அதிபர்களுடன் சென்று தமிழக முதல்வர் எடப்பாடியாரை சந்தித்து பேசினோம். பட்டாசு தொழிலை பாதுகாக்க அனைத்து நடவடிக்கை குறித்தும் பேசினோம். பட்டாசு தொழிலுக்கு என்றும் நான் உறுதுணையாக இருப்பேன் உங்களோடு ஒருவனாகதான் நான் உழைத்துக்கொண்டு இருக்கின்றேன்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

நிகழ்ச்சியில் அரிமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளர்ச்சி நிதிக்காக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ரூ.5 லட்சம் வழங்கினார்.