தமிழகம்

பத்திரிகையாளர் மறைவுக்கு துணை முதலமைச்சர் இரங்கல்

சென்னை

மூத்த பத்திரிக்கையாளர் கே.சுப்ரமணியன் மறைவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தினமணி நாளிதழின் முன்னாள் தலைமை நிருபரும், மூத்த பத்திரிகையாளருமான கே.சுப்ரமணியன் இன்று (நேற்று) மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். கே.சுப்பிரமணியன் பிரிவால் வாடும் அவர் தம் குடும்பத்தினருக்கும், பத்திரிகைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.