திருவண்ணாமலை

பல்வேறு கட்சிகளில் இருந்து 200 பேர் விலகி வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த 200 பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் 200க்கும் மேற்பட்டோர் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ பேசியதாவது:-

தமிழகத்தில் அம்மாவின் வழியில் முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பான ஆட்சி செய்து வருகின்றனர். இது மக்களாட்சி பெண்களுக்கான ஏராளமான திட்டங்களை செயல்படுத்தும் ஆட்சி. தாலிக்கு தங்கம், மானிய விலையில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம், அரசு பணி செய்யும் பெண்களுக்கு சம்பளத்துடன் பேருகால விடுப்பு, கற்பகால நிதியுதவி,

மகளிர் சுய உதவிக்குழுக்களில் கடனுதவி, கொரோனா காலத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு தலா 5000 ரூபாய் கடனுதவி திட்டம் என எண்ணற்ற திட்டங்களை அம்மாவின் அரசு பெண்களுக்காகவே செய்து வருகிறது.ஆகையால் அனைவரும் வரும் சட்டமன்றதேர்தலில் கழகத்திற்கு ஆதரவு தந்து முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் கரத்தை பலப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் எம்.திருநாவுக்கரசு, பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, ஒன்றிய கவுன்சிலர் மலர்பழனி, கேட்டவரம்பாளையம் ரமேஷ், தென்பள்ளிப்பட்டு தலைவர் தரணிபாண்டியன், பில்லூர் ஊராட்சி தலைவர் சண்முகப்பிரியா, கூட்டுறவு தலைவர் பத்மாவதி ஜீவரத்தினம், பழங்கோயில் தலைவர் செல்வராஜ், ஒன்றிய விவசாய அணி தங்கராஜ், கபாலி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.