சிறப்பு செய்திகள்

பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பு – ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து துணை முதலமைச்சர் கருத்து

சென்னை

பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பு என ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடை விதித்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்பு அளித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது.:-

அம்மாவின் அரசு ஏற்கெனவே அறிவித்திருந்த படி, பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.