தற்போதைய செய்திகள்

பவானி தொகுதியில் 11,067 வீடுகளுக்கு தனிநபர் இல்ல குடிநீர் இணைப்பு – அமைச்சர் கே.சி.கருப்பணன் பணியை தொடங்கி வைத்தார்

ஈரோடு

ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதி, கேசரிமங்கலம், குறிச்சி, மாணிக்கம்பாளையம், காடப்பநல்லூர், சிங்கம்பேட்டை, படவல்கால்வாய், பூதப்பாடி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 11,067 தனிநபர் இல்ல குடிநீர் இணைப்புகளுக்கு ரூ.12.80 கோடி மதிப்பீட்டில் பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க, ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தேவையை நிறைவேற்றிடும் வகையிலும், நீர் மேலாண்மையை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் 17,016 தனிநபர் இல்ல குடிநீர் இணைப்புகளுக்கு பணியை துவக்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கேசரிமங்கலம் ஊராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2,787 வீடுகளுக்கு ரூ.3.58 கோடி மதிப்பீட்டிலும், குறிச்சி ஊராட்சியில் 2,080 வீடுகளுக்கு ரூ.2.67 கோடி மதிப்பீட்டிலும், மாணிக்கம்பாளையம் ஊராட்சியில் 1,750 வீடுகளுக்கு ரூ.2.32 கோடி மதிப்பீட்டிலும், காடப்பநல்லூர் ஊராட்சியில் 657 வீடுகளுக்கு ரூ.76.38 லட்சம் மதிப்பீட்டிலும், சிங்கம்பேட்டை ஊராட்சியில் 1,585 வீடுகளுக்கு ரூ.1.07 கோடி மதிப்பீட்டிலும், படவல்கால்வாய் ஊராட்சியில் 540 வீடுகளுக்கு ரூ.73.73 லட்சம் மதிப்பீட்டிலும், பூதப்பாடி ஊராட்சியில் 1,668 வீடுகளுக்கு ரூ.1.64 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.12.80 கோடி மதிப்பீட்டில் 11,067 வீடுகளுக்கு தனிநபர் இல்ல குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் வி.எஸ்.சரவணபவா, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராதா, பூதப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பி.ஜி.முனியப்பன், ஊராட்சி தலைவர்கள் ராணி சிவலிங்கம், லட்சுமி முனியப்பன், குஞ்சம்மாள், யூனியன் கவுன்சிலர் கோபால் (எ) துரைசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மாணிக்கம்பாளையம் பாலசுப்பிரமணியம், குறிச்சி மணி, மயில்சாமி, நவீன், ஆர்.கே.விஜய், நல்லி விவேகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்