தற்போதைய செய்திகள்

பாரத் நெட் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு – அரசாணை வெளியீடு

சென்னை

பாரத் நெட் திட்டத்திற்கான நிதியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதி அளிக்கும் பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த 1,871 கோடி ரூபாய் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து திட்டத்தின் தொகையை ரூ.2,222 கோடியாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 544 கிராமங்களிலும் அதிவேக இணைய வசதி அளிப்பதற்கான பாரத்நெட் என்ற திட்டம் மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் செயல்படுத்த ஒப்பந்தம் விடப்பட்டது.இந்த திட்டத்தை செயல்படுத்த 1,871 கோடி ரூபாய் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து திட்டத்தின் தொகையை ரூ.2,222 கோடியாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், மத்திய அரசு சார்பில் ரூ.1815 கோடி வழங்கப்படும் எனவும் மீதமுள்ள தொகை மாநில அரசால் ஒதுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.