தற்போதைய செய்திகள்

பாலக்கோட்டில் ரூ.1 கோடியில் நவீன மின் தகன மேடை-முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்

தருமபுரி

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நவீன மின் தகன மேடையை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் நவீன மின் மயான தகன மேடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவரின் சீரிய முயற்சியால் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே ரூ. 1 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் நவீன மின் மயான தகனமேடை கட்டப்பட்டது.

இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் கொரோனோ தொற்று தீவிரமாக பரவி உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் கட்டி முடிக்கப்பட்ட நவீன மின் தகன மேடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர தீவிர நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்த நிலையில் இந்த நவீன மின் தகனமேடையை மக்கள் பயன்பாட்டிற்காக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.வி.அரங்கநாதன், பாலக்கோடு ஒன்றியக்குழு தலைவர் பாஞ்சாலை கோபால், ஒன்றிய கழக செயலாளர்கள் கோபால், செந்தில், பாலக்கோடு நகர கழக செயலாளர் சங்கர், முன்னாள் நகர கழக செயலாளர் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.