செங்கல்பட்டு

புதிய மாவட்ட கழக செயலாளர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்த செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், காஞ்சிபுரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளருமான கே.மரகதம் குமரவேல், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தையூர் எஸ்.குமரவேல், தெற்கு ஒன்றிய கழக செயலாளராக எஸ்.குட்டி (எ) நந்தகுமார், திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி.ராகவன், புதிய ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கழகத் தொண்டர்களிடம் அறிமுகம் செய்துகொண்டனர்.

பின்னர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் பேசியதாவது:-

நமது கழகத்தை சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கும் முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் நாம் சிறப்பாக பணியாற்றி செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தொகுதிகளான திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நம் கழகம் அறிவிக்கும் நமது வேட்பாளர்களை மாபெரும் வெற்றிபெற செய்ய நாம் இப்போதிலிருந்தே பணியாற்றிட வேண்டும். நம் கழகத்தில் உள்ள ஒவ்வொரு தொண்டனுக்கும் பதவி என்பது நிச்சயம் உண்டு. அதனால் நம் கழகத்தை வளர்க்க தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பின்னர் அனைவரும் நடந்துசென்று திருப்போரூர் செங்கல்பட்டு சாலை ரவுண்டானாவில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து தையூர் எஸ்.குமரவேல் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் திருப்போரூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் தண்டலம் ஆனந்த், ஒன்றிய மகளிரணி செயலாளர் மேரி, ஒன்றிய அவைத்தலைவர் ஆமூர் ஏழுமலை, ஒன்றிய நகர கிளை கழகச் செயலாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.