மற்றவை

புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் ஏழை- எளியோருக்கு நலத்திட்ட உதவி-அரியலூர் மாவட்ட கழகம் முடிவு

அரியலூர்

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளில் மாவட்டம் முழுவதும் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க அரியலூர் மாவட்ட கழகம் முடிவு செய்துள்ளது.

அரியலூர் மாவட்ட கழகம் சார்பில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73 வது பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம், அரியலூர் ரிதன்யா மஹால் திருமண மண்டபத்தில், கழக மாவட்ட செயலாளரும், அரசின் தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

அரியலூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், கீழப்பழுவூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவருமான பொய்யூர் எஸ். பாலசுப்பிரமணியன் வரவேற்றுப் பேசினார்.

மாவட்ட கழக துணைச் செயலாளரும், ஜெயங்கொண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான ஜெ.கே.என்.ராம ஜெயலிங்கம் முன்னிலை வகித்தார்.

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவருமான ஆ.இளவரசன், மாவட்ட அவைத்தலைவர் பெ.கணேசன், ஒன்றியக்குழு தலைவர்கள் ஆண்டிமடம் மருதமுத்து, தா.பழூர் மகாலட்சுமி, ஜெயங்கொண்டம் நகர கழக செயலாளர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் வைப்பம் சிவபெருமாள் உள்ளிட்டோர் பேசினர

வரும் 24-ந் தேதி தங்கத்தாரகை புரட்சித்தலைவி அம்மாவின் 73-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாவட்ட கழகம் சார்பில், அரியலூர் மாவட்டம் முழுவதும், கட்சி கொடி ஏற்றி, இனிப்பு வழங்கி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.