வேலூர்

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவி

வேலூர் மாநகர் மாவட்ட கழகம் முடிவு

வேலூர்

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழாவை ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேலூர் மாநகர் மாவட்ட கழகம் முடிவு செய்துள்ளது.

வேலூர் மாநகர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது குறித்தும், முதலமைச்சர் எடப்பாடி.

கே.பழனிசாமி வேலூர் மாநகருககு வருகை தந்தபோது அல்லும் பகலும் அயராது பாடுபட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்த கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிப்பது மற்றும் தேர்தல் பணி குறித்தும் கழக செயல்வீரர்கள்,

வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளரும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவருமான எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் நடைபெற்றது. கழக அமைப்பு செயலாளரும், வேலூர் மண்டல தேர்தல் பொறுப்பாளருமான முக்கூர் என். சுப்பிரமணியன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பொன்மனச்செம்மல்என்ற பட்டம் அளித்து பாராட்டிய கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்த நாளை அனைத்து மதத்தினரும் போற்றும் வகையில் அரசு விழாவாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கோடானு கோடி நன்றியை தெரிவிக்கப்பட்டது.

உலகமே வியந்து போற்றும் வண்ணம் ஏழை, எளியவர்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 73-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்ட காட்பாடி வெடிமருந்து தொழிற்சாலையை முற்றிலும் மூட வேண்டுமென பிதற்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செயலுக்கு வேலூர் மாநகர் மாவட்ட மக்களின் சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வேலூர் மாநகர மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட வேலூர் மற்றும் காட்பாடி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை
தமிழகத்திலேயே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்து வெற்றிக்கனியை தலைமையிடம் சமர்ப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.