தற்போதைய செய்திகள்

பூனையானூரில் ரூ.14.19 கோடியில் 192 அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள்

அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை

தர்மபுரி

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் பூனையானூர் கிராமத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.14.19 கோடி மதிப்பில் 192 அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் கட்டுமான பணியை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு சார் ஆட்சியர் மு.பிரதாப், தலைமை வகித்தார்

இவ்விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் பூனையானூர் கிராமத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.14.19 கோடி மதிப்பில் 192 அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு வீடும் தலா 400 சதுர அடிகள் பரப்பளவில் அமையவுள்ளது. இப்பணிகள்; 15 மாதங்களில் நிறைவுற்று விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசினார்.