தமிழகம்

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வேன் – முதலமைச்சர் உறுதி

சென்னை

புரட்சித்தலைவி அம்மா வழியில் தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வேன் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தங்கள் வாழ்வியலில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் அனைத்து மகளிருக்கும் அன்பான மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்கள் நலத்திட்டங்களை அம்மா வழியில் தொடர்ந்து செயல்படுத்தி பெண்கள் பாதுகாப்பை என்றும் உறுதி செய்வேன் என உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.