சிறப்பு செய்திகள்

பொது மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது – கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சென்னை
மின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது என்றும் பொதுமக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார்.

கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு.

கேள்வி : அரசியல் தொடர்பாக எதாவது பேசினீர்களா.

பதில் : அரசியல் சம்பந்தமாக எதுவுமே பேசவில்லை.

கேள்வி :பிரதமரைச் சந்திப்பதற்காகத் திட்டம் உள்ளதா

பதில் : இதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை.

கேள்வி : அதிமுக உட்கட்சி பிரச்சனை தற்போது எப்படி உள்ளது

பதில் : இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. எனவே இதுகுறித்து கருத்துச் சொல்ல இயலாது.கருத்துகள் எதாவது தெரிவித்தால் அது அந்த வழக்கைப் பாதிக்கும்

கேள்வி : ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதாகவும், அவருக்குத்தான் தொண்டர்களின் பலம் உள்ளதாக தெரிவித்துள்ளாரே.

பதில் : இதனை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். எங்களை பொறுத்தவரையில் நான் பல மாவட்டங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றேன். கிட்டதட்ட 20 மாவட்ட கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து விட்டேன். திண்டுக்கல், தாராபுரம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் என தொடர்ந்து அனைத்து மாவட்டத்திற்கும் செல்கிறோம்.

அதோடு பொதுக்கூட்டத்தில் கூட கலந்து கொண்டுள்ளேன். சென்னையில் கூட அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினேன். ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளோம். இன்றைக்கு தமிழகத்தில் சொத்து வரியை கடுமையாக உயர்த்தியுள்ளார்கள். வீடுகளுக்கு 100 சதவீதம் உயர்த்தியுள்ளார்கள்.

கடைகளுக்கு 150 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடுமையான மின் கட்டண உயர்வு. சராசரியாக 34 சதவீதம் உயர்த்தியுள்ளார்கள். 12லிருந்து 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வருடத்திற்கு 6 சதவீதம் உயர்த்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்கள்.

கேள்வி : மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாத காரணத்தினால் தான் உயர்த்தப்பட்டது. இதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று முதல்வர் தெரிவித்துள்ளாரே.

பதில் : எங்கள் ஆட்சி நடக்கும் போது எப்படி போராட்டம் நடத்தினார். மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் இரண்டு ஆண்டு காலம் கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல், பொருளாதார சூழல் மந்தமாக இருக்கும் காரணத்தினாலே, மக்கள் வாழ்வதற்கே போராடி வருகின்ற இந்த தருணத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவது முறையா.

இரண்டு ஆண்டு காலம் முடங்கி தான் இருந்தோம். அந்த அளவுக்கு கொரோனோ வைரஸ் தொற்று அதிகரித்திருந்தது. எளிதாக பரவக்கூடிய நோய். இதுபோன்ற நிலையில் இப்போது தான் படிப்படியாக மீண்டு வருகிறோம். இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய உயர்வு இருக்கக்கூடாது. அதனால் மக்கள் பாதிக்கிறார்கள். மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

பேட்டியின் போது கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ, கழக அமைப்பு செயலாளரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் எம்.பி ஆகியோரும் உடனிருந்தனர்.

கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு.

கேள்வி : அரசியல் தொடர்பாக எதாவது பேசினீர்களா.

பதில் : அரசியல் சம்பந்தமாக எதுவுமே பேசவில்லை.

கேள்வி :பிரதமரைச் சந்திப்பதற்காகத் திட்டம் உள்ளதா

பதில் : இதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை.

கேள்வி : அதிமுக உட்கட்சி பிரச்சனை தற்போது எப்படி உள்ளது

பதில் : இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. எனவே இதுகுறித்து கருத்துச் சொல்ல இயலாது.கருத்துகள் எதாவது தெரிவித்தால் அது அந்த வழக்கைப் பாதிக்கும்

கேள்வி : ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதாகவும், அவருக்குத்தான் தொண்டர்களின் பலம் உள்ளதாக தெரிவித்துள்ளாரே.

பதில் : இதனை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். எங்களை பொறுத்தவரையில் நான் பல மாவட்டங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றேன். கிட்டதட்ட 20 மாவட்ட கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து விட்டேன். திண்டுக்கல், தாராபுரம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் என தொடர்ந்து அனைத்து மாவட்டத்திற்கும் செல்கிறோம்.

அதோடு பொதுக்கூட்டத்தில் கூட கலந்து கொண்டுள்ளேன். சென்னையில் கூட அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினேன். ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளோம். இன்றைக்கு தமிழகத்தில் சொத்து வரியை கடுமையாக உயர்த்தியுள்ளார்கள்.

வீடுகளுக்கு 100 சதவீதம் உயர்த்தியுள்ளார்கள். கடைகளுக்கு 150 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடுமையான மின் கட்டண உயர்வு. சராசரியாக 34 சதவீதம் உயர்த்தியுள்ளார்கள். 12லிருந்து 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வருடத்திற்கு 6 சதவீதம் உயர்த்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்கள்.

கேள்வி : மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாத காரணத்தினால் தான் உயர்த்தப்பட்டது. இதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று முதல்வர் தெரிவித்துள்ளாரே.

பதில் : எங்கள் ஆட்சி நடக்கும் போது எப்படி போராட்டம் நடத்தினார். மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் இரண்டு ஆண்டு காலம் கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல், பொருளாதார சூழல் மந்தமாக இருக்கும் காரணத்தினாலே, மக்கள் வாழ்வதற்கே போராடி வருகின்ற இந்த தருணத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவது முறையா.

இரண்டு ஆண்டு காலம் முடங்கி தான் இருந்தோம். அந்த அளவுக்கு கொரோனோ வைரஸ் தொற்று அதிகரித்திருந்தது. எளிதாக பரவக்கூடிய நோய். இதுபோன்ற நிலையில் இப்போது தான் படிப்படியாக மீண்டு வருகிறோம்.

இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய உயர்வு இருக்கக்கூடாது. அதனால் மக்கள் பாதிக்கிறார்கள். மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.