தற்போதைய செய்திகள்

பொற்கால ஆட்சி நடத்தி வரும் கழகத்திற்கு ஆதரவளிக்க மக்கள் தயாராகி விட்டனர்- அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு

ஈரோடு

பொற்கால ஆட்சி நடத்தி வரும் கழகத்திற்கு ஆதரவளிக்க மக்கள் வாக்களித்து தி.மு.க.வின் பொய் பிரச்சாரங்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

ஈரோடு புறநகர் மாவட்டம் பவானி ஒன்றியம் குருப்ப நாயக்கன்பாளையத்தில் குருப்ப நாய்க்கன்பாளையம், தொட்டிபாளையம், சன்னியாசிப் பட்டி ஊராட்சி, வரத நல்லூர் ஊராட்சிக்குட்பட்டகழக தகவல் தொழில் நுட்ப பிரிவு, எம்ஜிஆர் இளைஞர் அணி ,இளைஞர் இளம் பெண்கள் பாசறை, மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் 200 பேர் கண்தானம், பவானி சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் குறைகளை தீர்க்க வாட்ஸ் அப் செயலி, மரக்கன்றுகள் நடும் விழா, ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை, கழக அரசின் சாதனைகளை விளக்கி பைக் பேரணி, தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் வழங்குதல், பல்வேறு கட்சிகளி விருந்து ஏராளமானோர் கழகத்தில் இணைதல் ஆகிய நிகழ்ச்சிகள் ஈரோடு புறநகர் மாவட்டக் கழக செயலாளரும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கே.சி.கருப்பணன் தலைமையில் நடைபெற்றது. பவானி ஒன்றிய செலாளர் எஸ்.எம்.தங்கவேலு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கே.கே.விஸ்வநாதன், தகவல் தொழில் நுட்ப பிரிவு வி.திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் உரையாற்றும் போது எனக்கு பின்னாலும் கழகம் 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என்றார். அம்மாவின் லட்சிய கனவை நிறைவேற்ற நாம் பாடுபட வேண்டும். புரட்சித் தலைவி அம்மா அவர்கள் உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 50 சதவீத இடஓதுக்கீட்டினை வழங்கினார். மகளிர் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை வழங்கினார். பவானி தொகுதியில் தார்சாலை பணிகள், குடிநீர் திட்டங்கள் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.கழகத்தில் சார்பு அமைப்பு நிர்வாகிகள் கழகத்தினருடன்பொதுமக்களிடம் கழக அரசின் சாதனைகளையும் திட்டங்களையும் வீடு வீடாக எடுத்துச் செல்ல வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் திமுகவினரின் பொய் பிரச்சாரங்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். அம்மா அரசின் நலத்திட்டங்கள் பொது மக்களிடம் சென்றடைய பாடுபட வேண்டும். மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். மாவட்ட கழகத்தின் சார்பில் நலிவுற்ற மக்களுக்கு சலவைப் பெட்டிகளும், தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் தற்போது பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அம்மா அரசிற்கு நல்லா தரவு அளிக்க தயாராகி விட்டார்கள். அம்மாவின் அரசு 2021 ம் ஆண்டிலும் அமையபாடுபட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சன்னியாசிப் பட்டி ஊராட்சி தலைவர் சித்திரசேனன் 100க்கும் மேற்பட்டோருடன் அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தார்.