தற்போதைய செய்திகள்

மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் கட்டும் பணி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஒன்றியத்திற்குட்பட்ட தெற்கு கழுகுமலையில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட கயத்தார் ஒன்றியத்தின் தெற்கு கழுகுமலையில் மகளிர் சுய உதவிக் குழுவினர் பயன்பாட்டிற்காக புதிய கட்டிடம் ரூ 75, லட்சம் மதிப்பீட்டில் கட்டும் பணியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் போ.சின்னப்பன் முன்னிலையில் மாவட்ட அறநிலையத்துறை தலைவர் பி.மோகன், மாவட்ட ஊரக முகமை வளர்ச்சி ‌திட்ட அலுவலர் தனபதி ஆகியோர் வரவேற்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடக்கு மாவட்டச் செயலாளரும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ, புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை துவக்கி வைத்தார்.

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கயத்தார் யூனியனின் தெற்கு கழுகுமலை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு பயன்பாட்டிற்கான புதிய கட்டிடம் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டும் பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில், கயத்தார் ஒன்றிய கழகச் செயலாளர் வினோபாஜி, கயத்தார் பேரூராட்சி செயல் அலுவலர் ஜோதிபாசு, தாசில்தார் பாஸ்கரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஸ்ரீநிவாசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட கவுன்சிலர் ப்ரியா குருராஜ், கழுகுமலை நகரச் செயலாளர் முத்துராஜ், ஸ்ரீமுருகன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கருப்பசாமி, கழுகுமலை வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் முத்தையா, முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், தூத்துக்குடி மாநகர் எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பி.ஜெகதீஸ்வரன், உட்பட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.