தற்போதைய செய்திகள்

மக்களுக்காக வீதியில் இறங்கி போராடுவோம்-முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் உறுதி

அம்பத்தூர்,

மக்களுக்காக வீதியில் இறங்கி போராடுவோம் என்று முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் கூறினார்.
திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மதுரவாயல் பைபாஸ் அணுகு சாலையில் உள்ள மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

கழக இணை ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க வருகிற 28-ந்தேதி நாம் அனைவரும் தமிழக மக்களுக்காக அவர்களை காக்கும் வகையில் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து உரிமைக்குரல் முழக்கப் போராட்டம் நடைபெறும் வேண்டும் என்று அறிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் அனைவரும் தங்களது வீட்டு வாசல் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். இதன்மூலம் அவர்கள் மக்களுக்கு செய்யும் துரோகங்களை பொதுமக்கள் அறிவார்கள். மக்களுக்காக வீதியில் இறங்கி போராடுவோம்.

முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சோதனையிட்டு கழகத்தை அசைத்து பார்க்கலாம் என்ற ஸ்டாலினின் கனவு ஒருக்காலமும் பலிக்காது. பொய்யான வாக்குறுதி கொடுத்து இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தி.மு.க. மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

அவர்கள் கொடுத்த நீட் தேர்வு ரத்து, இல்லத்தரசிகளுக்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாய், மாதாந்திர மின் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. நிறைவேற்றவும் மாட்டார்கள். எனவே உள்ளாட்சி தேர்தல் வந்தால் கழகம் மாபெரும் வெற்றி பெறும். நமக்கு அடையாளம் தந்த கழகத்தை மீண்டும் அரியணையில் ஏற்ற அனைவரும் பாடுபடுவோம்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் பேசினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் காசு ஜனார்த்தனம், என்.எஸ்.ஏ.மணிமாறன், புலவர் ரோஜா, ஜாவித் அகமது, இ.சி.சேகர், ராஜா என்கிற பேரழகன், திருநாவுக்கரசு, ரவிச்சந்திரன், துண்டலம் பாபு, ரா.காவேரி, வலசை மஞ்சுளா, காட்டுப்பாக்கம் ராஜகோபால், அந்தமான் முருகன், மதுரவாயல் ஏ.தேவதாஸ், என்.எம்.இம்மானுவேல், வளசை தாமோதரன், கந்தன், தென்றல்குமார், பரத், லட்சுமணன், மாணவரணி சதீஷ், இளஞ்செழியன், ராதாகிருஷ்னன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் செய்திருந்தார்.