சிறப்பு செய்திகள்

மண்ணைக் காக்க உயிர்த்தியாகம் செய்தவர் மாவீரர் அழகு முத்துக்கோன் – துணை முதலமைச்சர் புகழாரம்

சென்னை

தமிழ் மண்ணைக் காக்க உயிர்த்தியாகம் செய்தவர் மாவீரர் அழகு முத்துக்கோன் என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து தாய் மண்ணைக் காக்க போராடிய விடுதலை வீரர்களில் மாவீரர் அழகு முத்துக்கோன் அவர்களின் பங்கு அளப்பரியது. நெல்லைச் சீமை பாளையக்காரர்களிடம் ஆங்கிலேயர்கள் வரி வசூலிப்பதை எதிர்த்து போராடியவர் மாவீர் அழகு முத்துக்கோன்.

ஆங்கியேரின் தாக்குதலில் பீரங்கியால் பிளக்கப்பட்டு உயிர் பிரியும் தருவாயிலும் கூட தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று அஞ்சாமல் கூறிய நெஞ்சுரம் மிக்கவர் மாவீரர் அழகு முத்துக்கோன்.ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து தமிழ் மண்ணைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மாவீரர் அழகு முத்துக்கோன் அவர்களின் நினைவு நாளில் அன்னாரது தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றுவோம்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.