கோவை

மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் – பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

கோவை

கோவை வடக்கு தொகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம், சிறுவர் பூங்காவை பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடகோவை முதல் மருதமலை சாலை வரை, ரூ. 1 கோடியே 4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சாலை, 15-வது வார்டு பி.என்.புதூர் பகுதியில் ரூ. 15 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம், மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ரூ. 68 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகள், சீரநாயக்கன்பாளையம் பகுதியில் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா ஆகியவற்றை கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் வடகோவை மருதமலை சாலை 9/2 முதல் 10/2 கி.மீ. வரை ரூ. 1 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் இருவழி சாலையாக அகலப்படுத்தும் பணி, வட கோவை மருதமலை சாலை கீ.மீ. 10/2 முதல் 17/1180 கீ.மீ. வரை ரூ. 1 கோடியே 82 லட்சத்தி 25 ஆயிரம் மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணி, 38-வது வார்டு கல்வீரம்பாளையம் முதல் பொம்மனம்பாளையம், அஜ்ஜனூர் சாலை வரை ரூ. 1 கோடியே 89 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். கோவை வடக்கு தொகுதியில் மொத்தம் ரூ.7.20 கோடியில் வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர், நெடுஞ்சாலைத்துறை கோவை கோட்டப் பொறியாளர் சிற்றரசு, உதவி கோட்ட செயற்பொறியாளர் ராமுவேல், மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையர் செந்தில் அரசன், உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் ராஜேஷ், இளநிலை பொறியாளர் கல்யாணசுந்தரம், மாநகர் மாவட்ட பொருளாளர் பார்த்திபன், பகுதி செயலாளர்கள் புதூர் செல்வராஜ், ஜெயக்குமார், காலனி கருப்பையா, மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் செந்தில் பிரபு, மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் அசோக்குமார், துணை செயலாளர் செந்தில்குமார், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் லாலி ரோடு ராதா, பொன்னுசாமி, புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் கருப்புசாமி, வட்ட செயலாளர்கள் ராயப்பன், பாலகிருஷ்ணன், துரைராஜ், பார்த்திபன், நடராஜ், அருணாச்சலம், முருகேசன், மயில்சாமி, மோகன்குமார், கதிரேசன், வீரகேரளம் அம்மா பேரவை பகுதி செயலாளர் மனோகரன், விவசாய அணி மாநகர் மாவட்ட செயலாளர் துரை ராஜேந்திரன், மகளிர் அணி குணசுந்தரி, அவைத்தலைவர்கள் மாணிக்கவாசகம், ஆறுமுகம், இளைஞரணி மோகன்ராஜ், மாணவரணி ராஜேஷ், சபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.