சிறப்பு செய்திகள்

மாமன்னர் மருதுபாண்டியரின் 221-ஆவது நினைவு தினம் – திருஉருவச் சிலைக்கு கழகத்தின் சார்பில் அஞ்சலி

சென்னை,

மாமன்னர் மருதுபாண்டியரின் 221 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவச் சிலைக்கு கழகத்தினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாமன்னர் மருதுபாண்டியரின் 221-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியர் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு, கழக இடைக்காலப் பொதுச் செயலாளர்,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்,தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் ஆணைக்கிணங்க, கழகப் பொருளாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் எம்.எல்.ஏ, கழக துணைப் பொதுச்செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன்,எம்.எல்.ஏ,

கழக அமைப்புச் செயலாளரும்,திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ், எம்.எல்.ஏ,கழக அமைப்புச் செயலாளரும்,நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான ஓஎஸ்.. மணியன், எம்.எல்.ஏ, கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.கோகுல இந்திரா, கழக அமைப்புச் செயலாளரும்,

புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ,கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும்,மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான ஆர்,பி. உதயகுமார் எம்.எல்.ஏ,, கழக அமைப்புச் செயலாளரும்,மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான ஏ.ஏ. ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ,., சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.ஆர்.செந்தில்நாதன்,எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் ஜி. பாஸ்கரன், கழக மருத்துவ அணி துணைச் செயலாளரும்,

முன்னாள் அமைச்சருமான டாக்டர் எம்.மணிகண்டன்,ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி, திருநெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர் தச்சை என். கணேசராஜா,அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளரும், ராமநாதபுரம் மாவட்டக் கழக அவைத் தலைவருமான எம். சாமிநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களுக்கு மரியாதை செலுத்திய இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர் திரு. ஆர்.ஆர்.செந்தில்நாதன், எம்.எல்.ஏ,, சிறப்பான முறையில் செய்திருந்தார்.