தற்போதைய செய்திகள்

மாற்றுக்கட்சிகளில் இருந்து ஊராட்சி தலைவர்கள் உள்பட 50பேர் விலகி அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் கழகத்தில் ஐக்கியம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலை ஒன்றியத்தை சார்ந்த மூன்று ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட 50பேர் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.நடேசன், பலமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜகுமாரி செல்வதுரை, கானமலை ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா ரங்கசாமி உட்பட 50 பேர் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாவட்ட ஆவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

அதனைத்தொடர்ந்து கழகத்தில் இணைந்தவர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது ஜவ்வாதுமலை ஒன்றிய கழக செயலாளர் வெள்ளையன், ஜவ்வாது மலை ஒன்றியக்குழு தலைவர் ஜீவா மூர்த்தி, மேல் சிலம்படி ஊராட்சி மன்ற தலைவர் சந்தியாசங்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.