தற்போதைய செய்திகள்

மாற்று கட்சிகளிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் விலகல் – அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்

தருமபுரி

திமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் விலகி அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலகோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பஞ்சபள்ளி அடுத்த பாளையம் கிராமத்தில் இருந்து திமுக உள்ளிட்ட மாற்று கட்சியிலிருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் பாலசுப்பிரமணி தலைமையில் ,தருமபுரி மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான கே.பி.அன்பழகன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட கழக அவைத்தலைவர் தொ.மு.நாகராஜன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.வி.அரங்கநாதன், ஒன்றிய கழக செயலாளர்கள் கோபால், செந்தில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா சரவணன், பாலகோடு நகர கழக செயலாளர் சங்கர், கூட்டுறவு சங்க தலைவர் வீரமணி, ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சரவணன், ஒன்றிய அவைத்தலைவர் பி.ஜி.வெங்கட்ராமன், ஒன்றிய பொருளாளர் பாண்டுரங்கன், நிர்வாகிகள் பி.டி.சண்முகம், சுந்தரேசன், வெங்கடாசலம், புதூர் சுப்பிரமணி, செல்வம், பாண்டுரங்கன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.