சேலம்

முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தால் புனரமைக்கப்பட்ட ஆத்தூர் புது ஏரியில் நீர் நிரம்பியது – விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

சேலம்

முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தால் புனரமைக்கப்பட்ட ஆத்தூர் புது ஏரியில் நீர் நிரம்பி வழிந்தது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் பைபாஸ் சாலையில் உள்ள தென்னங்குடிபாளையம் புது ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியை குடிமராமத்து பணி மூலம் தூர்வாரி புனரமைக்க வேண்டும் என கடந்த ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி 2019-2020ம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி கால்வாய் ஆகியவை தூர்வாரும் பணி நடைபெற்றது. ரூ. 27 லட்சம் மதிப்பீட்டில் இந்த பணிகள் நடைபெற்றது. கடந்த சில தினங்களாக ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த ஆண்டு ஏரி நிரம்பியது. இந்த ஆண்டு இன்று ஏரி நிரம்பி வழிகிறது இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏரியில் நீர் நிரம்பி வழிந்ததால் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி, ஆத்தூர் நகர செயலாளர் மோகன் ஆகியோர் தலைமையில் ஏரிக்கு மலர்தூவி வணங்கினர். இந்த ஏரி நிரம்பியதால் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு வணங்கினர்.