சிறப்பு செய்திகள்

முதல்வரின் தாயார் மறைவுக்கு குடியரசுத்தலைவர் இரங்கல் – மத்திய அமைச்சர்கள்,பல்வேறு கட்சி தலைவர்கள்,அதிகாரிகள் அனுதாபம்

சென்னை

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுங்குளம் ஊராட்சி, சிலுவம்பாளையம் கருப்பக் கவுண்டரின் மனைவியும், இ.விஜயலட்சுமி, கே.கோவிந்தராஜூ மற்றும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர்களின் தாயாருமான கே.தவுசாயம்மாள் கடந்த 12ம்தேதி இரவு காலமானார். அவரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினார்கள். 13ம்தேதி செவ்வாய்க்கிழமை காலை அவரது உடல் சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அன்னாரது காரியம் இன்று (வியாழக்கிழமை) காலை 9.00 மணிக்கு சிலுவம்பாளையத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந், குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கைய்யா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் கே.ரோசய்யா ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் மறைவு மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும், தாயாரை இழந்து வாடும் முதல்வருக்கும், அவரது குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே.வைரமுத்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், நமது அம்மா நாளிதழ் செய்தி ஆசிரியர் மருது அழகுராஜ்,நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா, நடிகர் ரவி மரியா, திரைப்பட இயக்குநர் சி.ரங்கநாதன், நகைச்சுவை நடிகர் பி.ஜெயமேனி, திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியன் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து அவரது தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.

இதபோல் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி, சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர், பிரதிப் யாதவ், அரசு முதன்மை செயலரும், ஆவனக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையருமான மங்கத் ராஜ் சர்மா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை செயலாளர் சோ.மதுமதி, தமிழ்நாடு மின்சார வாரிய, தலைவரும், நிர்வாக இயக்குநருமான பங்கஜ்குமார் பன்சால், சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.சண்முகசுந்தரம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.விஜயலட்சுமி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கிரண் குர்ராலா, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.பி.சிவன் அருள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்நந்தூரி, காவல்துறை கூடுதல் இயக்குநர் ஏ.கே.விஸ்வநாதன், காவல்துறை இயக்குநர் சைலேந்தர பாபு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டாக்டர் எஸ்.பிரபாகர் ஆகியோரும் முதலமைச்சரிடம் நேரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் தினத்தந்தி நாளிதழ் குழும இயக்குநர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தி இந்து நாளிதழ் தலைவர் மாலினி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மனோஜ் குமார் சந்தாலியா, தினமலர் நாளிதழ் இயக்குநர் ஆதிமூலம், டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் ஜெயாமேனன், இந்து தமிழ் திசை ஆசிரியர் கே.அசோகன்,
புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாக ஆசிரியர் எஸ்.கார்த்திகை செல்வன், மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, நியூஸ் 7 தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியம் ஆகியோர் தொலைபேசி மூலம் முதலமைச்சரை தொடர்பு கொண்டு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.