சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 100.70 அடியாக அதிகரிப்பு

சேலம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  100.70 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 65.75 டி.எம்.சி.யாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்றுமுன்தினம் 15.124 கன அடியாக இருந்தது. நேற்று காலை நிலவரப்படி 14,210 கன அடியாக குறைந்தது. அதே வேளையில் அணையிலிருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தாலும், பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.