தமிழகம்

ரூ.1115.66 கோடி மதிப்பில் 4 புதிய சாலை பணிகள்

முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 23.2.2021 அன்று தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஒட்டன்சத்திரம், தாராபுரம், காங்கேயம் மற்றும் திருப்பூர் தெற்கு வட்டங்களுக்குட்பட்ட, ஒட்டன்சத்திரம் – தாராபுரம் – அவினாசிபாளையம் சாலையினை 713 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சாலையை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.

மேலும், 362 கோடியே 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 26 பாலங்கள் மற்றும் 2 சாலைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, 1,115 கோடியே 66 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள 4 சாலைப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உட்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்தும், பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதிசெய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், ஒட்டன்சத்திரம், தாராபுரம், காங்கேயம் மற்றும் திருப்பூர் தெற்கு வட்டங்களுக்குட்பட்ட, ஒட்டன்சத்திரம் – தாராபுரம் – அவினாசிபாளையம் சாலை (மா.நெ.37) கி.மீ. 37/4 முதல் 108/4 வரை, (பிபிபி-02) பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் நான்கு வழிச்சாலையாக 713 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சாலையை முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், ஈரோடு மாவட்டம் – மொடக்குறிச்சி, ஈரோடு மற்றும் பெருந்துறை வட்டங்களுக்குட்பட்ட, ஈரோடு நகரில் மூன்றாம் கட்டமாக கி.மீ. 7/6 முதல் 14/8 வரையில் 69 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட வெளிவட்ட சுற்றுச்சாலை மற்றும் ஜீவா நகரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம்,

ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டம், அரசூர் – நம்பியூர் சாலை, எலத்தூர் செட்டிபாளையத்தில் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மதீப்பீட்டிலும், சத்தி – உக்கரம் புளியம்பட்டி சாலை, காரப்பாடியில் 2 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; சத்தியமங்கலம் வட்டம், சத்தி – உக்கரம் புளியம்பட்டி சாலை, உக்கரத்தில்
1 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 3 பாலங்கள்,

கோயம்புத்தூர் மாவட்டம், கோவை வடக்கு வட்டம், கணபதி – ஆவாரம்பாளையம் சாலையில், கடவு எண்.9-க்கு மாற்றாக பீளமேடு – கோவை வடக்கு இரயில் நிலையங்களுக்கிடையே ஆவாரம்பாளையத்தில் 54 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம்,

மதுரை மாவட்டம், மதுரை தெற்கு வட்டம், தெப்பகுளம் முதல் விரகனூர் சாலை வரை 52 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வைகை தெற்கு நதிக்கரை சாலை,

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், மறைமலை அடிகள் பாலம் – இரும்புலியூர் சாலையில் (தாம்பரம் – வேளச்சேரி சாலை) மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் சாலை மற்றும் மேடவாக்கம் – மாம்பாக்கம் சாலை சந்திப்பு இணைக்கும் வகையில் மேடவாக்கத்தில் 51 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பல்லாவரம் வட்டம்,

தரப்பாக்கம் – அனகாபுத்தூர் இடையே அடையாற்றின் குறுக்கே அனகாபுத்தூரில் 12 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 2 பாலங்கள்,சென்னை மாவட்டம், பெரம்பூர் வட்டம், உள்வட்ட சாலை – பெரம்பூர் செங்குன்றம் சாலை சந்திப்பில், கொளத்தூர் இரட்டை ஏரி அருகில் வலது புறத்தில் 41 கோடியே, 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம்,

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மற்றும் பாளையங் கோட்டை வட்டங்களுக்குட்பட்ட மதுரை – கன்னியாகுமரி சாலை, திருநெல்வேலி சந்திப்பு அருகில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 16 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், இரட்டணை- மரூர் சாலையில்,

சங்கராபரணி ஆற்றின் குறுக்கே இரட்டணையில் 8 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் திருவெண்ணைநல்லூர் வட்டம், கூரானூர் சாலை மலட்டாற்றின் குறுக்கே கூரானூரில் 8 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள
2 பாலங்கள், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், நத்தம்-நெடியமாணிக்கம் சாலை, ஆண்டநாயகபுரத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்,

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், மன்னார்குடி – ஒரத்தநாடு – திருவோணம் சாலை, வெட்டிக்காட்டில் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; பட்டுக்கோட்டை வட்டம், தாமரன்கோட்டை – விக்ரமம் சாலை வட்டக்குடியில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பட்டுக்கோட்டை – முத்துப்பேட்டை சாலை, பரக்கலக்கோட்டையில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மன்னார்குடி -சேதுபாவாசத்திரம் சாலை, கருக்காவயலில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருவிடைமருதூர் வட்டம், திருவிடைமருதூர் – கோவிலாச்சேரி சாலை,

அம்மாபேட்டையில் 1 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் இடையாத்தி ஊராட்சியில் ஆதிதிராவிடர் தெரு மற்றும் வெள்ளாளர் தெருவை இணைக்கும் வகையில் கல்லணை கால்வாயின் குறுக்கே இடையாத்தியில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 6 பாலங்கள்,
தென்காசி மாவட்டம்,

சங்கரன்கோவில் வட்டம், செண்பாகபுரம் – மீனாட்சிபுரம் சாலை அக்கரைப்பட்டியில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டம், தண்டலை – திருத்தலையூர் சாலை நல்லயம்பட்டியில் 2 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூர்-ஆலம்பட்டி சாலை கொ.புத்தூரில் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்,
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம்,

பொன்னமராவதி – உலகம்பட்டி சாலையில் பிரிந்து முருகம்பட்டி செல்லும் சாலை (வழி) பிடாரம்பட்டியில் 1 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் கறம்பக்குடி வட்டம், கோட்டைக்காடு சாலை கோட்டைக்காட்டில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 2 பாலங்கள்,

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மல்லியக்கரை – ராசிபுரம் – திருச்செங்கோடு – ஈரோடு சாலை, காக்காவேரியில் 1 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் மெட்டாலா – முள்ளுக்குறிச்சி – பெரியகோம்பை சாலை உடையார்பாளையத்தில் 1 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 2 பாலங்கள்,
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டம், எளம்பலூர் சாலை உப்பு ஓடையின் குறுக்கே எளம்பலூரில் 1 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம், திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், ஈரோடு – தாராபுரம் சாலை வெள்ளியங்காட்டில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்,


என மொத்தம் 1075 கோடியே 64 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 26 பாலங்கள், 3 சாலைகளை முதலமைச்சர் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மேலும், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செய்யூர், மதுராந்தகம், வந்தவாசி, சேத்துப்பட்டு, மற்றும் போளூர் வட்டங்களுக்குட்பட்ட செய்யூர் – வந்தவாசி – சேத்துபட்டு – போளூர் சாலை (மா.நெ. 115) மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையுடனான இணைப்பு சாலையை 603 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ள கடின புருவங்களுடன் கூடிய இரு வழித்தட சாலைப் பணி,
கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடலூர், பண்ருட்டி, திருவெண்ணைநல்லூர் மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டங்களுக்குட்பட்ட கடலூர் முதல் மடப்பட்டு சந்திப்பு (மா.நெ. 9) வரை 231 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ள கடின புருவங்களுடன் கூடிய இரு வழித்தட சாலைப் பணி;
திருச்சிராப்பள்ளி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் துறையூர், ஆலந்தூர், மற்றும் பெரம்பலூர் வட்டங்களுக்குட்பட்ட துறையூர் – பெரம்பலூர் (மா.நெ. 142) சாலையை
143 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ள கடின புருவங்களுடன் கூடிய இரு வழித்தட சாலைப் பணி,
கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விருத்தாசலம், மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டங்களுக்குட்பட்ட விருத்தாசலம் – உளுந்தூர்பேட்டை (மா.நெ.69) சாலையை 136 கோடியே 43 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ள கடின புருவங்களுடன் கூடிய இரு வழித்தட சாலைப் பணி,
என மொத்தம் 1,115 கோடியே 66 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ள 4 சாலைப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

மேலும், நெடுஞ்சாலைத் துறையில் மேற்கொள்ளப்படும் சாலை மற்றும் பாலப்பணிகளின் தரத்தினை ஆய்வு செய்ய 2 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட 40 ஜீப்புகளை தரக்கட்டுப்பாடு உட்கோட்டங்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 2 உதவிக் கோட்டப் பொறியாளர்களுக்கு முதலமைச்சர் அவ்வாகனங்களுக்கான சாவிகளை வழங்கினார்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.