தற்போதைய செய்திகள்

ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை பணி – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட இனாம்மணியாச்சி ஈ.பி.காலனி பகுதியில் மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்நந்தூரி தலைமையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிஆணைக்கேற்ப கோவில்பட்டி தொகுதி முழுவதும் கொரோனா நிவாரண உதவிகளாக அரிசி மற்றும் மளிகை பொருட்களை தனது சொந்த செலவில் ஏழை எளியவர்களுக்கு வழங்கி வரும் வடக்கு மாவட்டச் செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூவிடம் இனாம்மணியாச்சி ஈ.பி.காலனி பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு தார்சாலை வசதி செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் ஈ.பி.காலனி பகுதியில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் செ.ராஜூ துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இந்து அறநிலையத்துறை தலைவரும், ஓட்டப்பிடாரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பி.மோகன், கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், கோவில்பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி, கோவில்பட்டி யூனியன் துணைத்தலைவர் பழனிச்சாமி, மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் ராமச்சந்திரன், சுப்புராஜ், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், கயத்தாறு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், வடக்கு மாவட்ட வர்த்தக அணி தலைவரும், கோவில்பட்டி தனலட்சுமி ஹோட்டல் உரிமையாளருமான விஜயராஜ், முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன் தூத்துக்குடி மாநகர எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பி.ஜெகதீஸ்வரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.