தற்போதைய செய்திகள்

ரூ.3.98 லட்சம் மதிப்பில் 197 பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக்கோழிகள் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்

திருப்பூர்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், நடைபெற்ற விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 197 கிராமப்புற பெண்களுக்கு தலா 25 நாட்டுக்கோழிகள் வீதம், தலா ரூ.2025 மதிப்பில் என ரூ.3,98,925 மதிப்பிலான விலையில்லா நாட்டுக்கோழிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர். மேலும், கால்நடை பராமரிப்புத்துறைக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து அதிகப்படியான நிதியினை ஒதுக்கி தந்துள்ளார். குறிப்பாக விவசாயிகளின் வாழ்வு மேம்பாட்டிற்காகவும் மற்றும் பெண் தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கிராமப்புற பெண்களுக்கு தால 25 எண்ணிக்கையிலான விலையில்லா நான்கு வார வயதுடைய அசில் இன நாட்டுக்கோழிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக கூண்டு வழக்கும் திட்டம் துவங்கப்பட்டு தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராம ஊராட்சிகளில் வழங்கப்பட்டு வந்த இத்திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் பேரூராட்சி பகுதிகளிலும் உள்ள பெண்களுக்கும் வழங்கப்படுகிறது.

முதலமைச்சர் செயல்படுத்தும் சிறப்பு திட்டமான நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டத்தில் இந்த வருடம் 2.50 லட்சம் மகளிர்களுக்கு நாட்டு கோழிகள் வழங்கப்பட்டது. முதலமைச்சர் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கால்நடைகளுக்கு என நடமாடும் மருத்துவ அவரச ஊர்தி 1962 என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் அனைத்து உதவிகளும் கால்நடைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் திறந்து வைக்கப்படும் கால்நடை கிளை நிலையம் மற்றும் கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளுக்கு இலவசமாக ஊசி மற்றும் மருந்துகள் போடப்படுகிறது. இதனை கால்நடை வளர்ப்போர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களது கால்நடைகளுக்கு எந்தவொரு நோயின்றி வளர்த்து. தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.