வருகின்ற தேர்தலில் திமுகவிற்கு மரண அடியை மக்கள் கொடுப்பார்கள்

கழக அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேட்டி
மதுரை
வருகின்ற தேர்தலில் திமுகவிற்கு மரண அடியை மக்கள் கொடுப்பார்கள் என்று கழக அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.
கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்கஅவனியாபுரத்தில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு கழக அமைப்புச் செயலாளர்வி.வி. ராஜன்செல்லப்பா மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர் மருது பாண்டியர்களின் 221நினைவு நாளை முன்னிட்டு, கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில், அவனியாபுரத்தில் உள்ள மாமன்னர் மருது பாண்டியர்கள் சிலைக்கு, கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்த சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு முதன் முதலில் அம்மா ஆட்சியில் தான் அரசு விழாக நடத்தப்பட்டது. அது மட்டுமல்ல அது திருப்புத்தூரில் மணி மண்டபம் உருவாக்கப்பட்டது. இது போன்று நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்த தியாகிகளுக்கும், வீரர்களுக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களும், எடப்பாடியாரும மரியாதை செலுத்தி, அவர்களின் புகழை அழியாபுகழாக உருவாக்கினார்கள்.
தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திமுக மக்களுக்காக முன்னேற்றத் திட்டங்களை செய்யாமல் ,தங்கள் குடும்ப வாரிசுகளுக்கு முன்னேற்ற திட்டங்களைத் தான் செயல்படுத்தினார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்துசெய்வொம் என்று கூறினார்கள், ஆட்சிக்கு வந்து 17 மாதங்கள் ஆகிறது, நீட் தேர்வுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாறாக எடப்பாடியார் ஏற்கனவே சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை காப்பி அடித்து மக்களை ஏமாற்றினார்கள்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளது, அம்மாவின்ஆட்சி காலத்திலும் சரி, எடப்பாடியார் ஆட்சி காலத்தில் சரி அமைதி பூங்காவாக இருந்தது. ஆனால் இன்றைக்கு நாள்தோறும் பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்து தமிழகமே சுடுகாடாக மாறிக்கொண்டிருக்கிறது.
நாள்தோறும் திமுகவின் அவல ஆட்சியை மக்களிடத்தில் தோலுரித்து எடப்பாடியார் காட்டு வருகிறார்.ஆனால் இதுவரை திமுக எந்த விளக்கமும் தரவில்லை.இதன் மூலம் திமுக ஆட்சி அவல நிலையாக உள்ளது என்று அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.
திமுகவின் பொதுக்குழுவில் அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பாட்டால் நான் தூங்கவில்லை என்று ஸ்டாலின் கூறுகிறார்.திமுக ஆட்சி என்றைக்கு வந்ததோ அன்று முதல்தொழிலாளர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள்,தாய்மார்கள்,அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் யாரும் தூங்கவில்லை.
அந்தளவில் திமுகவின் நிர்வாக சீர்கேடு மோசமாக உள்ளது.நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் கூட எடப்பாடியார் சட்டசபைக்கு வந்து பேசினால்,எங்கே திமுகவின் நிர்வாக சீர்கேட்டை தோலுரித்துக் காட்டி விடுவாரோ என்று பயந்து, நியாயமான முறையில் 62 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து போட்டு கொடுத்த கடிதத்தை மறுத்துவிட்டு ஒரு ஜனநாயக படுகொலையை திமுக நிகழ்த்தி விட்டது.
நான் சர்வாதிகாரியாக மாறுவேன் முதலமைச்சர் கூறுகிறார், உண்மையிலே எதிர்க்கட்சிகளுக்கும், மக்களுக்கும் சர்வாதிகாரியாக உள்ளார்.
இந்த கொடுங்கோல் ஆட்சி என்றைக்கு வீட்டுக்குப் போகும் என்று மக்கள் நினைத்துக் கொண்டுள்ளனர். நிச்சயம் வருகின்ற தேர்தலில் திமுகவிற்கு மரண அடியை மக்கள் கொடுப்பார்கள். மீண்டும் எடப்பாடியார் தலைமையில் புனித ஆட்சி மலரும் என்று தெரிவித்தார்.