தற்போதைய செய்திகள்

வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – அமைச்சர் க.பாண்டியராஜன் பேச்சு

அம்பத்தூர்

அனைத்து சாதியினரையும் தொடர்ந்து இழிவாக பேசி வரும் தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.

திருவேற்காட்டில் நகர கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளரும், ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்று ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மூன்றாவது முறையாக அம்மாவின் ஆட்சி அமைய இளம்பெண்கள் பாசறையின சிங்கங்கள் ஆகிய நீங்கள் களப்பணியாற்ற வேண்டும். முதல்வர் அறிவித்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலமாக ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது.

தொடர்ந்து திமுகவில் உள்ள அத்தனை தலைவர்களும் அனைத்து ஜாதியினரையும் மதத்தினரையும் இழிவாக பேசி வருகின்றனர் சாதி,மதங்களையும் இழிவாக பேசி வரும் ஒரே கட்சி திமுக. இதனை மக்கள் யாரும் மறக்கவில்லை,வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இன்று தமிழகத்தில் அனைத்து ஏரி குளங்கள் அணைகளை தூர்வாரியதன் மூலம் மழைநீர் தேக்கி வைக்கப்படுகிறது, அடையாறு ஆற்றில் தூர்வாரப்பட்ட காரணத்தினால் இன்று மழைநீர் செல்கிறது, கழிவுநீர் சென்றுகொண்டிருந்த ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பருத்திப்பட்டு ஏரியில் இன்று படகுகள் செல்கிறது திருவேற்காட்டில் உள்ள ஏரிகள் தூர்வாரப்பட்டு இன்று மழை நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள காரணத்தினால் 10 அடியில் குடிநீர் கிடைக்கிறது. நீர் மேலாண்மை குறித்து தினந்தோறும் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை ஸ்டாலின் கூறி வருகிறார். மேலும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்குள் நுழையும் சூழ்நிலையை எடப்பாடியார் உருவாக்கிக் கொடுத்துள்ளார்.

தினந்தோறும் புதிய திட்டங்களை அறிவித்து மக்கள் மனதில் முதல்வர் எடப்பாடியார் என்றால் ஓ.கே. சூப்பர் சூப்பர் என்று எந்தப் பக்கம் பார்த்தாலும் முதலமைச்சருக்கு புகழ்மாலை போற்றப்படுகிறது. சாதாரண குடும்பத்திலிருந்து இன்று முதலமைச்சர் பதவி வரை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வந்துள்ளனர். இதுபோன்று திமுகவில் வர முடியுமா ?அடிமட்ட தொண்டனையையும் பதவியில் அமர வைத்து அழகு பார்க்கும் ஒரே இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட மண்டல தேர்தல் பொறுப்பாளரும், அண்ணா தொழிற் சங்க மாநில செயலாளருமான கமலக்கண்ணன், திருவேற்காடு நகர செயலாளர் சத்திய நாராயணன், ஏ.டி.சந்திரன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் கோலடி மகேந்திரன், திருமலை ராஜா, டி.எஸ்.ராஜா, டன்லப் வேலன், ஐ.டி.அரசன், ஜி.பி.ராஜேந்திரன், மாதேஸ்வரன் உட்பட நகர, வட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.