தமிழகம்

வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை

வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தமிழக தலைமை தேர்தல் சத்ய பிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கடந்த 16-ந்தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. டிசம்பர் 15-ந்தேதிக்கு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுடைய வாக்காளர்கள், பெயரை நீக்க விரும்புவோர், திருத்த விரும்புவோர், இடமாற்றம் செய்ய விரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். இதனைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியல் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்ட்டது.

விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் ஜனவரி 5-ந்தேதி இறுதி செய்யப்பட்டு, ஜனவரி 20-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி தொடர்பாகவும், வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு, காணொலி காட்சி மூலம் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.