சிறப்பு செய்திகள்

வாள்சண்டை வீராங்கனைக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து

சென்னை

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள சென்னையை சேர்ந்த வாள்சாண்டை வீராங்கனைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:-

ஜப்பான்-டோக்கியோவில் நடைபெறவுள்ள 2021 ஒலிம்பிக் போட்டிக்கு சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வாள்சண்டை வீராங்கனை பவானிதேவி தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. தடைகள் பல கடந்து சாதித்திருக்கும் அவரது வெற்றிப்பயணம் தொடர நல்வாழ்த்துகள்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.