தற்போதைய செய்திகள்

விக்கிரவாண்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் 600 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

விழுப்புரம்

விக்கிரவாண்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் 600 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

விக்கிரவாண்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முகுந்தன் ஏற்பாட்டில் பனையபுரத்தில், துாய்மை பணியாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள், கார், ஆட்டோ ஓட்டுனர்கள், போலீசார் மற்றும் இருளர் குடும்பங்கள் என மொத்தம் 600 பேருக்கு கொரோனா தடுப்பு நிவாரணமாக அரிசி, காய்கறி, கபசுர குடிநீர் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி பனையபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கி கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்ச்செல்வன், வடக்கு ஒன்றிய செயலாளர் எசாலம் பன்னீர், நகர செயலாளர் பூர்ணராவ், ஒன்றிய இளைஞரணி துணை தலைவர் ஜோதிராஜா, முன்னாள் சேர்மன் நாகப்பன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சரவணக்குமார், மாநில பொதுக்குழு காமினி லட்சுமி நாராயணன், முன்னாள் சேர்மன் கலியமூர்த்தி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் வேம்பி வாசு பிரகாஷ், கூட்டுறவு சங்க துணை தலைவர் ராஜாங்கம், இயக்குனர்கள் பொன்னங்குப்பம் ரவி, விக்கிரவாண்டி ரமேஷ், மேலக்கொந்தை துரைமுருகன், வாக்கூர் ரவி, முன்னாள் ஊராட்சி செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், தனஞ்செழியன், முன்னாள் கவுன்சிலர் திருநாவுக்கரசு, கிளை செயலாளர் லட்சுமி நாராயணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜவேல், முன்னாள் துணை சேர்மன் அசோகன், நிர்வாகிகள் புஷ்பநாதன், முருகன், சங்கர் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.