மற்றவை

விடியா தி.மு.க. அரசை தூக்கி எறிவோம்-மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் பேச்சு

செங்கல்பட்டு

விடியா அரசை ஆட்சிக்கட்டிலில் இருந்து தூக்கி எறிவோம் என்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் பேசினார்.

சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க. அரசை கண்டித்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமையில் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கழக மகளிர் அணி இணை செயலாளருமான மரகதம் குமரவேல், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் தண்டரை கே.மனோகரன், மாவட்ட கழக அவைத்தலைவர் ம.தனபால், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் வி.வேலாயுதம், மாவட்ட கழக துணை செயலாளர்கள் மஞ்சுளா ரவிக்குமார், எ.எஸ்வந்த்ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, கழக அரசின் நலத்திட்டங்களை ரத்து செய்தது, கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றுக்கு காரணமான விடியா தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் பேசியதாவது:-

கழக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடியார் தலைமையில் செயல்பட்ட கழக அரசு புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது வழியில் பல எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்திது. ஆனால் இன்றைய முதல்வர் ஸ்டாலின் மக்களுக்காக செயல்படுத்திய திட்டங்களை ரத்து செய்து வருகிறார்.

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதுவுமே இதுவரை நிறைவேற்றியது இல்லை. தற்போது சொத்து வரி மற்றும் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதனால் அடித்தட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

மேலும் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் கெட்டுள்ளது. கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் கரங்களை வலுப்படுத்தி வரும் தேர்தல்களில் விடியா அரசை ஆட்சிக்கட்டிலில் இருந்து தூக்கி எறிவோம்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் பேசினார்.