தற்போதைய செய்திகள்

விருகம்பாக்கம் தொகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்விளக்கு கம்பங்கள் – விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

சென்னை

தென்சென்னை தெற்கு மாவட்டம், விருகம்பாக்கம் தொகுதி 129-வது வார்டில் பொன்னியம்மன் கோவில் தெரு, காந்திநகர் தெருக்களில் பழுந்தடைந்த மின்விளக்கு கம்பங்களை புதிதாக மாற்றியமைக்கும் பணிகளுக்கு விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

தென்சென்னை தெற்கு மாவட்டம், விருகம்பாக்கம் தொகுதியில் புரட்சித்தலைவி அம்மாவின் வழித் தொடரும் அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக விருகம்பாக்கம் தொகுதியில் 129-வது வார்டில் பொன்னியம்மன் கோவில் தெரு, ராஜாதெரு, அகத்தியர் தெரு, கனரா பேங்க் காலனி, நேருநகர், சத்தியமூர்த்திநகர், காவேரிரங்கன் நகர் ஆகிய பகுதிகளில் பழுந்தடைந்து மின்விளக்கு கம்பங்களை அந்த பகுதி மக்களின் வேண்டுகோளையும் ஏற்று தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி அறிவுறுத்தலின்படி புதிதாக மின்விளக்கு கம்பங்களை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மாற்றியமைக்கும் பணிகளுக்கு விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் வழித்தொடரும் அரசு பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது, இந்த பழுதடைந்த மின்விளக்கு கம்பங்களை மாற்றி அமைக்கப்படுகின்ற மின் கம்பங்கள் உயரமாக இருப்பதால் மின்விளக்கு வெளிச்சம் அதிக அளவில் கிடைக்கும் இதனால் குற்றங்கள் தடுக்கப்படும் இதனால் பொது மக்கள் அனைவரும் பயன் பெறுவர்.

இவ்வாறு விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பி.டி.சி.செல்வம், வட்டகழக செயலாளாகள்; பி.கசாலி, கதிர்வேல், எஸ்.பி.குமார், கணேசன், தேவகி, டி.ரமேஷ், வீரபாண்டி, அண்ணாமலை, விருகை.தனசேகர், கோமலா மாமி, சத்யநாராயணன், உமாசங்கர், செல்வம், முரளி, கண்ணன், உமாமகேஷ்வரி, ஆறுமுகம், முகமதுகனி, சுடலை, காளை, பாலகிருஷ்ணன், காளிமுத்து, மீனாட்சி, நாகூர்கனி, ஏ.கே.சீனிவாசன், முத்து மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும், நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.